பள்ளிகரணையில் தத்தளிக்கும் மக்கள் : மீட்டு வரும் தீயணைப்புத்துறையினர்

பள்ளிகருணையில் வெள்ள நீரில் மக்கள் சிக்கி தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் வரும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2021-11-28 13:00 GMT

பள்ளிகரணை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

சென்னை பள்ளிகரணை சாய் பாலாஜி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக முழங்கால் அளவு மழைநீரானது தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் மின்சாரமானது துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் அப்பகுதி மக்கல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மாலை முதல் மீண்டும் மழையானது பெய்து வரும் நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என இப்பகுதியில் பாதிப்புக்குள்ளாகி உள்ள குடியிருப்பு வாசிகளை வேளச்சேரி தீயணைப்பு துறையினர் கொட்டும் மழையிலும் மீட்டு வருகின்னர்.

Tags:    

Similar News