பள்ளிகரணையில் இளைஞர் சரமாரி வெட்டி படுகொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல்

பள்ளிகரணையில் இளைஞர் ஒருவர் சரமாறியாக வெட்டி படுகொலை, 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.;

Update: 2022-03-21 09:15 GMT
பள்ளிகரணையில் இளைஞர் சரமாரி வெட்டி படுகொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல்

இளைஞர் வெட்டி காெலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

  • whatsapp icon

பள்ளிகரணையில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை, 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.

சென்னை பள்ளிகரணை, ஜல்லடியான்பேட்டை வயல் வெளிப்பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டுப்பட்டு இறந்து கிடப்பதாக பள்ளிகரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற பள்ளிகரணை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யபட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த நரேஷ்(25), என்பதும், நேற்றிரவு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், நரேஷை ஜல்லடியான்பேட்டை, பெரியார் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வழிமறித்து, வயல்வெளி பகுதிக்கு அழைத்து சென்று தலை, கழுத்து முதுகு, தொடை என உடலில் பல்வேறு பகுதிகளில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பள்ளிகரணை போலீசார் 2 தனிப்படை அமைத்து கொலைக்கான காரணம், மற்றும் மர்ம நபர்கள் 7 பேர் யார் என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். பள்ளிகரணையில் கடந்த வாரம் மட்டும் 2 கொலைகள், ஒரு கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News