நீலாங்கரையில் சாலையோரம் நின்று கார் மீது பைக் மோதல் ஒருவர் பலி
நீலாங்கரையில் சாலையோரம் நின்ற கார் மீது அதிவேகமாக வந்த பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில், சாலையோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காரை நிறுத்திவிட்டு காரின் உரிமையாளர் அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றுள்ளார். அந்த காரில் வலது பின்புறத்தில் ஒருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வேகமாக மோதி கீழே விழுந்தனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் தலையில் பலத்த காயமேற்பட்டு உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். விசாரணையில் சாலையோரம் காரை நிறுத்தியவர் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த செய்யது(29), என தெரியவந்தது.
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பெரிய நீலாங்கரை குப்பத்தை சேர்ந்த மீனவர் பிரபு(32), என்பதும் தெரியவந்தது. தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.