மடிப்பாக்கத்தில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது
மடிப்பாகத்தில் கஞ்சா கடத்தி வந்த வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலிசார் மடிப்பாக்கம் கூட்ரோடு சாலையில் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநில இளைஞனை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 7 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வட மாநிலத்தை சேர்ந்த கங்கேஷ்வர் என்பதும் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவனிடமிருந்து 7 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலிசார் குற்றவாளியை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.