வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் சென்னைக்குட்பட்ட, சோழிங்கநல்லூர் தொகுதியில் சென்னை பகுதிகளில் இருந்து புறநகர் பகுதிக்கு நீர் வெளியேறும் வழி தடங்களை குறிப்பாக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுப்பணிதுறையினர் அப்பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களை, கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையாளரும் ஆன பணீந்திர ரெட்டி மற்றும் மாநகர ஆணையாளர் ககன்தீப் சிங் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் குறிப்பாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வீராங்கல் ஓடை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், நூக்கம்பாளையம் பாலம், மதுரபாக்கம் ஓடை, முடிச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களை நேரில் சென்று தற்போது நடைபெறும் பணிகள் மற்றும் நடைபெறவிருக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.