கொட்டிவாக்கத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு வலைவீச்சு
கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னை கொட்டிவாக்கம், வைதேகி தெருவில், கண்ணகி நகரை சேர்ந்த சுமதி(45), இவர் 15,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பேசியபடி சாலையில் நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சுமதி பேசிக்கொண்டிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
அவர்களை பிடிக்க, சுமதி ஓடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. செல்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்ற இளைஞர்கள் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.