கார் டிரைவர் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

நீலாங்கரை கார் டிரைவர் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-14 07:15 GMT

கைது செய்யப்பட்ட பூவை ராஜன்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் கடந்த 2001ம் ஆண்டு கார் ஓட்டுநர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஷாஜகான்(21) என்பவர் முன் விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் அனைவரையும் கைது செய்த நீலாங்கரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

பின்னர் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு நடத்தி வந்த நிலையில் 2005ம் ஆண்டிற்கு பிறகு இதில் முக்கிய குற்றவாளியான பூவைராஜன்(47), என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

17 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் பூவைராஜனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த மே மாதம் 30ம் தேதி பிடி வாரண்ட் பிறப்பித்தனர். இதனை தொடந்து நீலாங்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜஸ்டின் தலைமையில் தலைமை காவலர் பிரதீப், முதல்நிலை காவலர் இன்பராஜ், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் திருப்பூரில் தலைமறைவாகி இருந்த பூவைராஜனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News