கொட்டிவாக்கம் ஸ்ரீ விஜய கணபதி ஆலய மஹா கும்பாபிஷேக விழா

சோழிங்கநல்லூர்: கொட்டிவாக்கத்தில் உள்ள பழமைமிக்க ஸ்ரீ விஜய கணபதி ஆலய மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2021-09-11 12:30 GMT

கொட்டிவாக்கம் ஸ்ரீ விஜய கணபதி ஆலய மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் அடுத்த கொட்டிவாக்கத்தில் புதுபிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமைமிக்க ஸ்ரீ விஜய கணபதி ஆலய மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த கொட்டிவாக்கத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விஜயகணபதி ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜெகத்குரு ஜெயேந்திர சுவாமிகள் விஜயம் செய்த திருத்தலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைகளோடு வரும் பக்தர்கள் இன்புற்று செல்ல வழிவகை செய்யும் சிறப்பு வாய்ந்த ஆலயமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் பழமை வாய்ந்த ஆலயத்தின் பழுதடைந்த பாகங்களை புனரமைத்து, கோபுரங்களுக்கு பஞ்சவர்ணங்கள் தீட்டி, புதிதாக ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணியர், அரசமரத்தடி விநாயகர், நாக தேவதைகள், ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆகியோரை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பின்னர் ஸ்ரீ கணபதி பிராத்தனை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், லஷ்மி பூஜை என பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலத்தின் 50 ஆண்டு ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தினை விநாயகர் சதுர்தியினை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்றது.

ஆலய அறங்காவலர் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள், தலைவர் எம்.ஆர் கார்மேகம், செயலாளர் மீனா கே.சேகர், துணைத் தலைவர் இ.ஜெகநாதன், பொருளாளர் என்.திருநாவுக்கரசு, இணைச்செயலாளர் கே.பூபதி, துணை தலைவர் எஸ்.குமார், 183வது வட்ட திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜி.எஸ்.ரவி ஆகியாேர் நிகழ்ச்சியை ஒன்றிணைந்து செய்தனர். மேலும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றனர்.

Tags:    

Similar News