இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் : வெள்ள நிவாரண நிதி ரூ 5000ம் கேட்டு ஆர்ப்பாட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-04 06:45 GMT

பெரும்பாக்கத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ ஐந்து ஆயிரம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை செம்மெஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் வசிக்ககூடிய மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 5000 ரூபாயினை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பருவமழை காலங்களில் பாதிப்படையும் செம்மெஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதியின் உட்கட்டமைப்பை சரிசெய்து போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் இட்டவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் என 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News