மனைவியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய கணவன் : போலீசார் அதிர்ச்சி
பெரும்பாக்கத்தில் மனைவியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
பெரும்பாக்கத்தில் மனைவியின் டூவீலரை தீ வைத்து கொளுத்திய கணவன்.
அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை, அழைத்த போது வராததால் ஆத்திரத்தில் மனைவியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை மேடவாக்கம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன்(29), தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா(25), இருவருக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கணவன் மீது சந்தேகப்பட்டு மனைவி பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நள்ளிரவில் தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சத்தியசீலன் சென்றுள்ளார். அப்போது சங்கீதா கணவருடன் வீட்டிற்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். இருசக்கர வாகனம் எரிந்து எலும்புக் கூடானது.
இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சத்தியசீலனை பெரும்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.