பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நீலாங்கரையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2021-07-26 11:45 GMT
செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில்  இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சார்பாக நீலாங்கரையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், கோட்ட பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், உள்ளிட்ட இந்து முன்னணியினர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆவேசமாக தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினர். தாய்மண்ணை இழிவுபடுத்திய பாதிரியாரை தூக்கிலிட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் கூறுகையில்:- இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையிலும் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பாரததேவியையும், பூமாதேவியையும் இழிவுபடுத்திய ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தது மட்டும் போதாது.

அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், என்று கூறியதோடு அமைதியான தமிழகத்தில் மத கலவரங்களை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ பாதிரியார்கள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டும், என்று இந்த ஆர்ப்பாட்டம் தற்போது நடத்துகிறோம். 

ஜார்ஜ் பொன்னையாவுக்கு கொடுக்கப்படும் தண்டனை மறுபடியும் தமிழகத்தில் இதுபோன்ற மத கலவரங்களை தூண்டும் விதத்திலும் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு பாடமாக அமையும் எனக் கூறினார். மேலும் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ பாதிரியார்களை கைது செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News