சென்னை மடிப்பாக்கத்தில் முன்னாள் செய்தியாளர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை மடிப்பாக்கத்தில் முன்னாள் செய்தியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
தற்கொலை செய்து கொண்ட சதீஷ்குமார்.
சென்னை மடிப்பாக்கம், சக்தி நகரில் தனியாக வசித்து வந்த முன்னாள் செய்தியாளர் சதீஷ் குமார். இவர் பல தனியார்( வின் டிவி, கலைஞர் டிவி, நியூஸ் 18) தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
6 மாத காலமாக பிரவசத்திற்காக சென்ற மனைவி கருத்து வேறுபாடு காரணமாக திரும்பவும் வரவில்லை. இதனால் மடிப்பாக்கத்தில் தனியாக தங்கியிருந்தவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று அவரது மனைவி செல்போனில் பலமுறை தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்தவர் தெரிந்தவர் மூலமாக சென்று பார்க்க சொன்ன போது வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறையிலிருந்து வந்து கொண்டிருக்கின்றனர். வந்த பிறகு தான் தற்கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.