உத்தண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி
உத்தண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.;
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த உத்தண்டியில் சென்னை புற நகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 199 வட்ட அதிமுக சார்பில் வட்ட செயலாளர் உத்தண்டி M.சங்கர் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் உருவ படத்திற்க்கு மாலை அனிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
மேலும் இந்தநிகழ்சியில் பகுதி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வாசுதேவன், பகுதி மாணவர் அணி செயலாளர் ஜெகநாதன், பகுதி மாணவர் அணி துணைச் செயலாளர் உத்தண்டி மணிகண்டன்,மாவட்ட ஒன்றிய பிரதிநிதி பாபு, பகுதி எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் தெய்வசிகாமணி, வட்ட இணைச் செயலாளர் தேவகி, பாண்டியன், வரதராஜன், யுவராஜ்,பரத்,ஆகாஷ், அன்பு, சக்திவேல், தனசேகர், குப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.