செம்மஞ்சேரியில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு செம்மஞ்சேரியில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.;
சோழிங்கநல்லூர் அருகே, செம்மஞ்சேரி காவல் சரகத்திற்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு அச்ச உணர்வை போக்கவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் செம்மஞ்சேரி உதவி ஆணையர் ரியாசுதீன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் இருந்து வீதி வீதியாக சென்று கொடி அணிவகுப்பை நடந்தினர்.
அப்பகுதி முழுவதும் நடைபெற்ற கொடி அணிவகுப்பானது மீண்டும் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.