கோவளம் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத்தை முன்னாள் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
சோழிங்கநல்லூர் அருகே கோவளத்தில் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத்தை முன்னாள் எம்.எல்.ஏ இதயவர்மன் தி றந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த கோவளம் ஊராட்சியில், திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத்தை திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழாவில், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ஜி.அருள்தாஸ் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் என்.கோபு. கிளைகழக செயலாளர்கள் அப்சாலி, பெருமாள், இளைஞர் அணி செயலாளர் சதீஷ், மற்றும் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.