சோழிங்கநல்லூரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா
சோழிங்கநல்லூரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சோழிங்கநல்லூரில் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் சென்னை தெற்கு மண்டல மின் பகிர்மான வட்டம் மேற்பார்வையாளர் சுகுமார் தலைமையில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நடைபெற்றது.
டிசம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை வருடாந்தோறும் பொதுமக்களுக்கு மின்சாரம் சிக்கனம் குறித்து மின் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் அந்த வகையில் இன்று மேளதாளம் அடித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பின்னர் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மின்சார சிக்கனம் மற்றும் பாதுபாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதேபோல் சென்னை பெருங்குடி சுங்கச்சாவடியிலும் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ஐடிசி கோட்டம் செயற்பொறியாளர் வெங்கடேஷன் மற்றும் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.