வாகனத்தில் இருந்து கையசைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓட்டு சேகரிப்பு
வாகனத்தில் அமர்ந்தபடி கையசைத்து, கைகூப்பி வணங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்குகள் சேகரிப்பு;
சோழிங்கநல்லுர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர்,செம்மசேரி சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அமமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அவர் சோழிங்கநல்லூர் வேட்பாளர் முருகனை ஆதரித்து வேனில் அமர்ந்து, இருகரம் கூப்பியும், கைகளை அசைத்தும் வாக்கு சேகரித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பேச முடியாது என்பதால் அவர் கை அசைத்து வாக்கு சேகரித்ததை மக்கள் ஏற்றுக்கொண்டு அவருக்கு மக்களும் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பைக்கில் 500க்கும் மேற்பட்டோர் 10 கிலோ மீட்டர் தூரம் வரை தேமுதிக தலைவரை பின்தொடர்ந்து வீதி,வீதியாக சுற்றி ஓட்டு சேகரித்தனர்.