சென்னை ஈ.சி.ஆர். சாலையில் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் நடந்த சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-11 12:30 GMT

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் 10 கிரவுண்ட் கொண்ட மந்தவெளி திடல் பகுதியை அப்பகுதிமக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருந்ததாகவும் சுவர் அமைக்கப்பட்டதாகவும் கூறி ஊர் மக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி மதில் சுவற்றை இடித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.


இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் ஈ.சி.ஆர். சாலையில் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டுனர். இச்சம்பம் குறித்த தகவல் அறிந்து பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்த நடத்தினார். இச்சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தபின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதனால் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய மார்க்கத்திலும், சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லக்கூடிய மார்க்கத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. கடுமையான போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்பட்டது. 

Tags:    

Similar News