கே.பி.அன்பழகனின் மருமகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

நீலாங்கரையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்;

Update: 2022-01-20 06:30 GMT

முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மருமகன் வீடு

தமிழகத்தில் அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை ரூபி காம்ளக்ஸ் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகன் சிவக்குமார் வீட்டில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதால் நீலாங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News