வெளிநாட்டில் வேலைக்காக சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம்: போலீஸ் அறிவிப்பு

வீட்டு வேலைக்கு சென்று குவைத்தில் சிக்கி தவித்த பெண் போலீசாரின் துரித நடவடிக்கையால் 5 நாட்களில் மீட்பு

Update: 2022-05-03 05:45 GMT

செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி

வெளிநாட்டில் வேலைக்காக செல்லுவோர் பணி விசா பெற்று செல்லவும், சுற்றுலா விசாவை பயன்படுத்தி செல்ல வேண்டாம் தாம்பரம் கமிஷனர்  தெரிவித்தார்..
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், லட்சுமண் நகரை சேர்ந்தவர் வனஜா(58), இவரது மகள் மஞ்சுளா(38), இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்பாக மஞ்சுளாவை விட்டு விட்டு சென்று விட்டார்.
இது நாள் வரை தாயின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவெடுத்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த பாஷா என்ற டிராவல் ஏஜென்சி மூலம் குவைத் நாட்டிற்கு வேலைக்காக 60000 ரூபாய் பணம் கொடுத்து கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி சென்றுள்ளார்.
குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றவர் தான் இங்கு விற்கபட்டு மிகவும் கஷ்டபடுவதாக அவரது அம்மாவிடம் வாட்ஸாப் மூலம் வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார். இது குறித்து பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் டொமினிக் ராஜிடம் ஏப்ரல் 26ம் தேதி தெரிவித்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலையை சேர்ந்த ஏஜெண்ட் பாஷா(31), சர்தார்(50), ஆகியோரை 28ம் தேதி பிடித்து வந்து விசாரணை செய்து, குவைத்தில் சிக்கியுள்ள மஞ்சுளாவை மீட்டு தமிழகம் வர ஏற்பாடு செய்தனர்.
இன்று இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி பேசுகையில், வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற மோகத்தில் நிறைய பெண்களை வேலைக்கு அனுப்புகிறார்கள், விசாரிக்காமல் யாரும் செல்ல வேண்டாம், கண்ணீர் மல்க தாய் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் ஆணையரக போலீசார் உடனடியாக மீட்டு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
மீட்கப்பட்ட பெண் கூறுகையில் கொத்தடிமை போல் நடத்தியதாக, உணவு வழங்காமல், அடிக்க முயன்றதாவும், இதனால் தனது அம்மாவை தொடர்பு கொண்டு கூறியதால், அவர் மூலம் போலீசாரின் உதவியோடு 5 நாட்களில் தாயகம் திரும்பியதாக கூறினார். இல்லையென்றால் பிள்ளை குட்டிகளை கூட பார்த்து இருக்க முடியாது என கண்ணீர் மல்க பேசினார்
கமிஷ்னர் ரவி அவர்கள் இது போன்ற பிரச்னைகளுக்கு protector of emigrations அவர்களுக்கு எழுத உள்ளதாகவும், தனியாக ஒரு பெண்ணை அனுப்பும் போது சரியான முறையில் விசாரித்து தான் அனுப்ப வேண்டும், அரசுக்கு விவரங்களை அனுப்பி சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வை காணலாம் என்றார் அவர்.
குவைத்தில் சிக்கித் தவித்த தமிழக பெண்ணை தகவல் கிடைத்த 5 நாட்களில் மீட்டு தமிழகம் கொண்டு வந்த பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார் டொமினிக் ராஜ், உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன், ஆய்வாளர் தயாள் ஆகியோரை தாம்பரம் கமிஷனர் ரவி பாராட்டினார். 

Tags:    

Similar News