100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் வேண்டாம்

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி;

Update: 2021-10-24 03:45 GMT

பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் நடைபெற்ற பெருங்குடல் குறித்தான மூன்று நாள் பயிற்சி வகுப்பு

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் பெருங்குடல் குறித்தான மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. சென்னை ஜெம் மருத்துவமனையும், இந்திய குடல் நோய் மருத்துவர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 200 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர்; தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம்களில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே 11 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய அளவில் இதுவரை 100 கோடி தடுப்பூசிகளும், தமிழகத்தில் 5 கோடிக்கும் மேலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசிகள் பற்றி தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News