பெருங்குடி மண்டலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 8000 பேருக்கு உணவு வழங்கல்

பெருங்குடி மண்டலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 8000 பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Update: 2021-11-08 13:45 GMT

பெருங்குடி மண்டலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உணவு வழங்கியது.

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் ராம்நகர், திருமுருகன்நகர், பள்ளிக்கரணை, நேருநகர், வி.ஜி.பி., சாந்தி காலனி, ராஜேஷ் நகர், பெருங்குடி கல்லுக்குட்டை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகியவற்றில் தலா ஒரு பகுதி ஆகியவை மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளன.

மண்டலம் முழுவதும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற, 37 மின், டீசல் மோட்டார் பம்ப் வாயிலாக அகற்றப்பட்டு வருகின்றன.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலை பாலாஜிநகர், கல்லுக்குட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 8000 பேருக்கு காலை பொங்கல், மதியம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டன. 

இவற்றை தயாரிக்க பெருங்குடி, பள்ளிக்கரணையில் தனி இடம் தேர்வு செய்யப்பட்டது. மாநகராட்சியால் தயாரிக்கப்பட்ட உணவினை கண்காணிப்பு அதிகாரி சரவணன், மருத்துவர், சுகாதார அலுவலர் ஆகியோர் ருசி பார்த்து பரிசோதனை செய்த பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு மருத்துவ முகாம்:

தொடர் மழையை முன்னிட்டு மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வார்டிலும் மருத்துவ நடந்தது.இதில், பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை நடத்தி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

பெருங்குடி மண்டல கண்காணிப்பு அதிகாரி சரவணன், உதவிக் கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் தன்னார்வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இதில், மண்டலம் முழுவதும் உள்ள பல்வேறு நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தனியார் நிறுவன தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவது, பாதுகாப்பாக தங்க வைப்பது, தேவையான உதவிகளை மேற்கொள்வது, மழைநீர் வடிய நடடிக்கை எடுப்பது ஆகியவை குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News