கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி திடீர் ஆய்வு
கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மோற்கொண்டார்.
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் காவல் நிலையத்தில் திடீரென காவல்துறை தலைமை இயக்குனரும், டிஜிபியுமான சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவில் உள்ளவர்களிடம் பெயர் விவரங்களை கேட்டறிந்து, பணி குறித்தும் கேட்டறிந்தார். புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு அறிவுரைகளை டிஜிபி வழங்கினார்.
இறுதியாக காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாருடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.