தமிழகத்தில் AY 4.2 கொரோனா வைரஸ் பரவலா?அமைச்சர் மா.சு.விளக்கம்
தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகில் உள்ள கண்ணகிநகர் எழில் நகரில் (துரைப்பாக்கம்), சென்னை குடிநீர் வாரியம் மூலம் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகத்தை, அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை போது டெங்கு உருவாக்கின்றது. இதனை தடுக்க, விழிப்புணர்வு பணிகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் 320, பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் புதிதாக இந்த ஆண்டே 11மருத்துவ கல்லூரி மூலம் 1650 மருத்துவ இடங்களை, இந்த ஆண்டே ஒதுக்கீடு செய்ய மத்திய சுகாதார துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. இங்கு டெல்டா வகை கோவிட் மட்டுமே தற்போது வரை கண்டறியப்பட்டு வருகிறது. என்றார்.