சமூக வலைதளம் மூலம் கள்ள நோட்டை வாங்கி புழக்கத்தில் விட்ட நபர் கைது
கள்ள நோட்டு 21500 ரூபாயை வாங்கி புழக்கத்தில் விட்டவர்கள் கூரியர் நிறுவன உதவியால் போலீசில் சிக்கினார்;
சமூக வலைதளம் மூலம் கள்ள நோட்டை வாங்கி புழக்கத்தில் விட்ட நபர் கைது 21500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல். குரியரால் சிக்கினார். சென்னை வேளச்சேரி, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சதீஷ்(30), இவர் ஊட்டச்சத்து மாவு விற்பனையாளராக உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய போது ஹைதராபாத்தை சேர்ந்த சுஜித் என்பவர் கள்ள நோட்டு விற்பனை என பதிவிட்டுள்ளார். அதனை பார்த்துவிட்டு அவரிடம் பேசி கூகுள் பே மூலம் பணம் செலுத்தி கள்ள நோட்டை கூரியர் மூலம் வாங்கி புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். கூரியரில் வந்த பார்சலில் பணம் இருப்பது போன்று தெரிந்ததால் கூரியர் நிறுவனம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பேரில் கிண்டி உதவி ஆணையர் சிவா தலைமையில் உதவி ஆய்வாளர் அருண் ஆகியோர் அடங்கிய தனிப்படை யினர் கூரியரில் இருந்த செல்போன் எண்ணை வைத்து சதீஷ்(30), என்பவரை கைது செய்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் முதலில் 1100 ரூபாய் பணத்தை கூகுள் பேவில் அனுப்பி அதற்கு 3000 ரூபாயை கூரியரில் பெற்று செலவு செய்து கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுள்ளார்.
இரண்டாவது முறை 3900 ரூபாய் அனுப்பியுள்ளார் அதற்கு 8500 ரூபாய் கள்ள நோட்டு குரியரில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
கள்ளநோட்டு தரமாக இல்லை என சுஜித்திடம் தெரிவிக்க மீண்டும் 13000 ரூபாய் அனுப்பிய போது தான் சிக்கிக் கொண்டார்.
100 ரூபாய் தாள்கள் 69ம், 200 ரூபாய் தாள்கள் 8ம், 500 ரூபாய் தாள்கள் 26ம் என மொத்தம் 21500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.