கொரோனா விதிமீறல்: சென்னையில் பிரபல பொழுதுபோக்கு பூங்காவிற்கு சீல்
கொரோனா விதிமீற் செயல்பட்ட புகாரில், சென்னையில் விஜிபி மரைன் கிங்டம் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சீல் வைத்து, 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி குழுமத்திற்கு சொந்தமான, விஜிபி மரைன் கிங்டம், கொரோனா விதிமுறைகளை மீறி செயல்படுவதாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
தகவலின் பேரில், சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15வது மண்டல அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, விஜிபி மரைன் கிங்டம் பொழுதுபோக்கு பூங்காவை மூடி, அதிகாரிகள் சீல் வைத்தனர்; அத்துடன், 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.