பேராசிரியர் மீது கல்லூரி மாணவிகள் புகார்: நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்

பள்ளிகரணையில் தவறாக நடந்து கொண்டதாக பேராசிரியர் மீது மாணவிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2021-12-17 12:30 GMT

 தனியார் கல்லூரியின் பேராசிரியர்.

சென்னை பள்ளிகரணை ஜல்லடையான் பேட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் இருவர், பள்ளிகரணை காவல் நிலையத்தில் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகாரளித்துள்ளனர்.

முன்னதாக கல்லூரி மாணவிகள் துறை தலைவர் பத்மநாபனிடம் கடந்த 6ம் தேதி ஆபிரகாம் அலெக்ஸ்(53), என்பவர் மீது புகார் கொடுத்துள்ளனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் கல்லூரி முதல்வர் ராம்நாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News