கண்ணகி நகரில் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட, கண்ணகி நகர், எழில் நகர் பகுதியில் மெகா தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.;
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட, கண்ணகி நகர், எழில் நகர் பகுதியில் மெகா தடுப்பூசி முகாம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாமில் பயனாளிகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து கேட்டறிந்தார். மருத்துவ பணியாளர்களிடம் தேவைகள் குறித்து பேசினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் அவர்களுக்கான குறைகள் குறித்து கேட்டறிந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு சென்றவர்.
யாரும் எதிர்பாராத விதமாக மாநகர பேருந்தில் ஏறி பெண் பயணிகளிடம் இலவச பயணம் குறித்தும், அதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வு பெண் பயணிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்கள் முதல்வரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.