சென்னை செம்மஞ்சேரி அருகே ஒருவர் கொலை: நண்பர்கள் இருவர் கைது

சென்னை செம்மஞ்சேரி அருகே, குடிக்க அழைத்துச் சென்று நண்பரை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-15 00:15 GMT
சென்னை செம்மஞ்சேரி அருகே ஒருவர் கொலை: நண்பர்கள் இருவர் கைது
  • whatsapp icon

சென்னை பழையமகாபலிபுர சாலை, செம்மஞ்சேரி அடுத்த எழில்மிகு நகர் செல்லும் வழியில் உள்ள முட்புதருக்குள் அருண் என்பவரை,  கடந்த 11ம் தேதி மதியம் குடிக்க அழைத்து சென்று,  அவரது நண்பர்களே தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர்,  இரு தினங்கள் கழித்து 14ம் தேதி மதியம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய சென்றவர்களை, வழக்கறிஞர் செம்மஞ்ச்சேரி ஆய்வாளர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர். கொலையான தகவல் அறிந்து செம்மஞ்சேரி போலீசார் முட்புதருக்குள் சென்று தலை நசுங்கி இறந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில்,  இருவரும் துரைப்பாக்கத்தை சேர்ந்த விஜய்(எ)மணி(39), மேட்டுக் குப்பத்தை சேர்ந்த சதீஷ்(40), என்பதும், குடிபோதையில் தங்களது செல்போனை திருடியதாக எண்ணி கல்லை போட்டு கொன்று விட்டு சென்று விட்டதாகவும், அடுத்த நாள் வந்து பார்த்த போது இறந்தது தெரியவந்ததால் சரணடைய சென்றதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News