செங்கல்பட்டு மாவட்ட ரோட்டரி கிளப் சார்பாக பதவி ஏற்பு விழா
செங்கல்பட்டு மாவட்ட ரோட்டரி கிளப் சார்பாக புதிதாக பதவி ஏற்பு விழாவும் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்ட ரோட்டரி கிளப் சார்பாக புதிதாக பதவி ஏற்பு விழாவும் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. இவ்விழாவில் கொரோன நோய் தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்த இருளர் இன மக்களுக்கு புடவையும் மற்றும் தார்ப்பாய்கள் மேலும் செய்யார் ஆதரவற்ற முதியோர் தாய் தந்தையர் இழந்தவர்களுக்காக நடத்தப்படும் அனாதை ஆசிரமத்திற்கு ரூபாய் இருபத்திரெண்டாயிரம் மதிப்பு உள்ள மின் விசிறிகளும், டேபிள் சேர்கள், வழங்கப்பட்டது. மேலும் ஏழைகளுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மற்றும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவிக்கு கல்விக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தலைமை விருந்தினர் நிர்மலா ராகவன், கௌரவ விருந்தினர்கள் செங்கல்பட்டு துணை சூப்பிரண்டு ஆப் போலீஸ் ஆதர்ஷ்பஷேரோ, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சத்தியா, செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகம், மற்றும் Ryan. K.மனோகரன் தலைவர், Rtn.M. ருதுவேலன் செயலாளர், Rtn.S.சிவசங்கர் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.