செங்கல்பட்டு: ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கும் அதிமுக பிரமுகர்!
ஆதரவற்றவர்களுக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கி வரும் அதிமுக பிரமுகர்;
ஆதரவற்றோருக்கு உணவு, முக கவசங்களை வழங்கும் அதிமுக பிரமுகர் தையூர் ராஜா.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்த ஊரடங்கால் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், திருவிடந்தை, உள்ளிட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தினந்தோறும் முக கவசம் மற்றும் மதிய உணவை அதிமுக பிரமுகர் தையூர் எம்.ராஜா வழங்கி வருகிறார்.
இவருடன் ஜி.ஜெகன், வி.சாமிநாதன் ஜி.தட்சணாமூர்த்தி , எல்.எபினேசர், எம்.வினோத் ,எம்.முத்து கே.ஸ்டீபன், நா.ஜான் ஆகியோரும் இணைந்து உணவு வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.