கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் செல்போன் பறிப்பு: இருவர் கைது
சென்னை கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை கொட்டிவாக்கம், வைதேகி தெருவில், கண்ணகி நகரை சேர்ந்த சுமதி(40), என்ற பெண் கடந்த 9ம் தேதி, நடந்து சென்று கொண்டிருந்த போது அவருடைய 15,000 ரூபாய், மதிப்புள்ள செல்போனை இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இளைஞர்களை பிடிக்க சுமதி கூச்சலிட்டபடி அவர்களை பிடிக்க ஓடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
செல்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்ற இளைஞர்கள் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் சுமதி புகாரளித்தார்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நீலாங்கரை குற்றப்பிரிவு ஆய்வாளர் கமலகண்ணன் தலைமையில், காவலர்கள் பிரதீப், இன்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த அருண்(22), இராயபேட்டையை சேர்ந்த அருண்குமார்(26), ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.