பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் கால்நடைகளால் விபத்து

பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-03-10 15:15 GMT

பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் கால்நடைகள் சண்டையிடுகின்றன.

சென்னை பள்ளிகரணை, வேளச்சேரி பிரதான சாலையில் மாடுகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்து சண்டையிடுவது, சாலையில் படுத்து கொள்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடிக்காமல் விட்டு விடுவதால் சாலையில் திரிவதும், சண்டையிடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அதேபோல் இன்று இரு மாடுகள் முட்டிக்கொண்டு சண்டையிட்டதால் பள்ளிகரணை சாலையில் வாகன ஓட்டிகள் பயந்து போய் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பின்னர் மாடுகளை பொதுமக்கள் கல்லால் தாக்கி விரட்டியடித்தனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



 


Tags:    

Similar News