மேடவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை 4 கிலோ வெள்ளி திருட்டு

கடந்த, 28ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான ஆரணி சென்றவர் இன்று சென்னை திரும்பியபோது நகை திருடு போனது தெரியவந்தது

Update: 2021-11-16 16:00 GMT

மேடவாக்கத்தில் திருடர்களால் உடைக்கப்பட்ட கதவு

வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த, 12 பவுன்  தங்க நகைகள், நான்கு கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர்.
சென்னை, மேடவாக்கம், வடக்குபட்டு மெயின்ரோடு, திருவேங்கடம் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்லாஸ்(39), பெருங்குடியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில், டீம் லீடராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 28ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான ஆரணி சென்றவர் இன்று சென்னை திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெய்லாஸ் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 12 பவுன்  தங்க நகைகள், நான்கு கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News