நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படம் சேதம்: பாஜகவினர் புகார்.

சென்னை மேடவாக்கம் நன்மங்கலத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருத்தியிருந்த பிரதமர் மோடியின் படம் அகற்றியதாக பாஜக புகார்

Update: 2022-05-11 12:15 GMT

 நியாயவிலைக் கடையில் இருந்த பிரதமர் மோடி படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை கோரி பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் புகார் அளித்த பாஜகவினர்

நியாய விலைக் கடையில் இருந்த பாரத பிரதமர் மோடியின் படத்தை அகற்றி சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சென்னை மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் (KG015) பாரத பிரதமர் நரேந்திர மோடி படம் இல்லாமல், முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர் படம் மட்டும் இருப்பதை கண்ட பாஜக பிரமுகரான பரங்கிமலை ஒன்றிய தலைவர் ஜெயமூர்த்தி என்பவர் மோடியின் படத்தை கட்சி நிர்வாகிகள் மூலம் எடுத்துவரச் சொல்லி நியாய விலைக் கடையில்  பொருத்தியுள்ளார்.

இதனை அறிந்த நன்மங்கலம் ஊராட்சி திமுக துணைத் தலைவர் செல்போன் எண்ணில் இருந்து பாஜக மாவட்ட செயலாளர் வேல்முருகன் என்பவருக்கு தொடர்பு கொண்டு யார் மோடியின் படத்தை வைத்தது எனவும், நேரில் வரவேண்டுமென

அழைத்தார். பாஜகவினர் நேரில் சென்ற போது நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை நன்மங்கலம் ஊராட்சி தலைவர் திமுகவை சேர்ந்த கிரி மற்றும் துணைத் தலைவர் கார்த்தி உட்பட சிலர் கழற்றி சேதப்படுத்தி கீழே வீசினார்கள். மேலும் எங்களையும், பெண் நிர்வாகிகளையும் ஆபாசமாக சைகை காட்டி, திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். இது தொடர்பாக பாஜகவினர் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News