சென்னை மாநகராட்சி 187வது வார்டில் பாஜகவினர் வாக்கு சேகரிப்பு
சென்னை மாநகராட்சியின் 187வது வார்டில் பாஜகவினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.;
சென்னை மாநகராட்சி, 187 வது வார்டில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்த பாஜகவினர்.
சென்னை மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் 187 வது வார்டில் பாஜக சார்பில் கிருஷ்ணபிரியா ஸ்ரீதர் போட்டியிடுகிறார். இப்பகுதியில் சரஸ்வதி தெரு, பொன்னியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
மாநகராட்சி 187 வது வார்டில் வெற்றி பெற்றால், நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வருவதாகவும், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள், மக்களுக்கான அனைத்து பணிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். கடந்த 2001 முதல் 2011 வரை, அப்பகுதியில் வார்டு உறுப்பினராக ஸ்ரீதர் பணியாற்றிய போது செய்த திட்டங்களை கூறி தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.