அன்னை அரவணைப்பு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா

அன்னை அரவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளை சார்பில் கொரோனா காலத்தில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா;

Update: 2021-10-16 07:15 GMT

கொரோனா பேரிடர்காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியவர்களை கெளரவபடுத்தும் விதமாக அன்னை அரவணைப்பு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கினார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் இயங்கிவரும் அன்னை அரவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளை சார்பில் கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அதன் நிறுவனர் தேவிமணி தலையில் நடைபெற்றது.

மாநில செயலாளர் லயன். சிவகுமார் முன்னிலை வகிக்க மாநில மகளிர் அணியை சேர்ந்த ஆர்த்தீஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் விருகை.ரவி, பாஜக மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் புரட்சி கவிதாசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சமுக ஆர்வலர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், ஊடக துறையினர் என பல்வேறு விதங்களில் கொரோனா பேரிடர்காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியவர்களை கெளரவபடுத்தும் விதமாக அன்னை அரவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளையினர் விருதுகளை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவை மெய்படுத்தும் விதமாக வருகைபுரிந்த அனைவருக்கு மரக்கன்று மற்றும் உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News