கோவிலம்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக தாக்குதல்

கோவிலம்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-03-15 00:15 GMT

கோப்பு படம் 

சென்னை, நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு (21), இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர், மூன்றாவது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். 14ம் தேதி இரவு, பணியில் இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து, விஷ்ணுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிகரணை போலீசார், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஷ்ணுவை மீட்டு,  குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கரணை போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சேலையூர் உதவி ஆணையர் முருகேசன். தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News