சென்னை: பாலவாக்கத்தில் அங்கன்வாடி மைய சுவர் இடிந்து விழுந்து விபத்து

சுவர் இடிந்து விழும் நேரத்தில் யாரும் அவ்வழியாக செல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.;

Update: 2022-01-01 11:30 GMT

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் ஆதிதிராவிடர் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் அருகில் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கன்வாடி மைய கட்டிடம் செயல்பட்டு வந்தது.  இக்கட்டிடம் சேதமடைந்தது காணப்பட்டதால் அதை பல நாட்களாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக அங்கன்வாடி மைய கட்டிடத்தின் சுற்றுச்சுவர் கட்டிடத்தையொட்டி செல்லக் கூடிய பள்ளிக் கூட சாலையில் இடிந்து விழுந்தது. சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

முன்னதாகவே இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தை அதிகாரிகள் அலட்சியத்தால் காலதாமதம் செய்து வந்ததாகவும், தற்போது கட்டிடத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த பிறகும் தகவல் தெரிவித்தபோது மாநகராட்சி அதிகாரிகள் அதை அகற்ற வராமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு அப்பாவி சிறுவர்கள் உயிரிழந்தனர். அதிகாரிகள் பழைய கட்டிடங்களை ஆராய்ந்து இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது. 



Tags:    

Similar News