அதிமுக சாதனைகளை வலியுறுத்தி வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளர் கேபி.கந்தன் சாதனைகளை வலியுறுத்தி வாக்கு சேகரிப்பு

Update: 2021-03-28 01:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம், ஜெயா நகர், வள்ளுவன் நகர் பகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் கேபி.கந்தன், அதிமுகநிர்வாகிகளுடன் ஆட்சியின் சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை  கூறி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பெண்களுக்கு மாதம் 1500, வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர், குடும்பஅட்டை வைத்துள்ள அனைவருக்கும் வாஷிங் மிஷின் என்று வாக்குறுதிகளை கூறி  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடு செய்து மலர் தூவி, மாலை அணிவித்து,  ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பை அளித்தனர். 

Tags:    

Similar News