சென்னையில் இராட்சத விளம்பர பேனர்கள் அகற்ற நடவடிக்கை - மேயர் பிரியா
சென்னையில் வைக்கப்பட்டுள்ள இராட்சத விளம்பர பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா கூறினார்.;
சென்னை சோழிங்கநல்லூர் மண்டலம் 15ல் மாமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மகேஷ் குமார், மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் மண்டல அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலத்தில் உள்ள நிறை குறைகள், உள்ளிட்டவை குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. பின்னர் மண்டல அலுவலக முன் பகுதியில் மேயர் மரக்கன்று நட்டினார்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ராஜன் கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர்கள் எந்த ஆய்வுற்கு சென்றாலும் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு செல்லவும் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். அனைத்து மண்டலங்களிலும் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்றார்.
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இராட்சத விளம்பர பேனர்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது, சென்னை முழுவதும் உள்ள விளம்பர பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.