இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர்

செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனாந்த்.

Update: 2021-10-26 04:00 GMT

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுடன் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனாந்த் சந்தித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட நிர்வாகிகளை வெற்றியடைய செய்த மக்களுக்கு நடிகர் விஜயின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 129 நபர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 நபர்களும், துணை தலைவர் பதவிக்கு 12 நபர்களும் மற்றும் 115 வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெற்றிபெற்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்பு அவர்களிடம் ஓட்டு கேட்ட முறை குறித்து கேட்டறிந்தார். மத்திய மாநில அரசிடம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை கேட்டு மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறித்தியதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த 11 அம்சம் கொண்ட திட்ட படிவத்தை அளித்துள்ளதாகவும் இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News