இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது
சுனாமி குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையன் முகம் பதிவாகி இருந்தது.
இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த சிறுவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குடப்ட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது.அதன் பேரில் கண்ணகி நகர் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் சுனாமி குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையன் முகம் பதிவாகி இருந்தது.
அதை வைத்து எழில் நகரை சேர்ந்த விஷால்(எ) சக்திவேல்(18), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்ற நபர்களான அதே பகுதியை சேர்ந்த முகமது உசேன்(எ) உசேன்(27), அஜித்(எ) குதிரை அஜித்(19), மற்றும் ஒரு சிறார் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகமது உசேன் கண்ணகி நகரில், கஞ்சா அடிக்கும் போது இவர்களுக்கு அவனிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் கொள்ளையர்களாக மாறியிருக்கிறார்கள் இவர்கள் 4 வீடுகளின் பூட்டை உடைத்து திருடியிருப்பதும் தெரியவந்தது.அவர்களிடமிருந்து 10.5 சவரன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு டிவி, லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரை சிறையிலும், சிறாரை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.