பெருங்குடியில் பள்ளி மாணவனிடம் பணம் பறிப்பு : 2 பேர் கைது
பெருங்குடியில் பள்ளி மாணவனிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, துரைப்பாக்கம் அடுத்த பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு மாணவன் நேற்று காலை சுமார் 08.00 மணியளவில், வீட்டினருகே உள்ள பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கலைஞர் தெரு மற்றும் ஜி.கே.மூப்பனார் தெரு சந்திப்பு அருகே, மாணவனை 2 நபர்கள் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி மாணவன் வைத்திருந்த, 100 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து மாணவனின் தந்தை வெங்கடேசன், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்து, மாணவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லுக்குட்டையை சேர்ந்த கார்த்திக்(22), ஶ்ரீதர்(21), ஆகிய 2 நபர்களை கைது செய்னர், அவர்களிடமிருந்து 100 ரூபாய் பணம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.