குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை பல்லாவரம் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-27 05:15 GMT

தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் வீடு.

சென்னை பல்லாவரம் அடுத்த கண்ணபிரான் கோயில் 8வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி ராஜலட்சுமி(36), இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், ராஜலட்சுமி ஷீ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மனைவியை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு யாரோ ஒருவர் வந்து செல்வது தொடர்பாக மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் அடிக்கடி சண்டையிட்டதாக கூறபடுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி மண்ணெண்ணை ஊற்றி தனக்கு தானே தீவைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரை மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 90% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News