பம்மலில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
பம்மலில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
அதிமுக தொடங்கப்பட்டு 50வது பொன் விழா ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.பம்மல் நகரில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பம்மல், நாகல்கேனி ஆகிய இடங்களில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்பட்டத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
அதனை தொடர்ந்து பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் பம்மல் நகரமன்ற முன்னாள் துணை தலைவர் அப்பு என்ற வெங்கடேசன் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.