மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-12-19 06:00 GMT

குரோம்பேட்டை பேரூந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை பேரூந்து நிலையம் அருகே பல்லாவரம் நகரகழக நாம் தமிழர் கட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறிய மாநில, ஓன்றிய அரசுகளை கண்டித்து நகரசெயலாளர் தென்றல்அரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க தலைவர் அன்புதென்னரசு, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், தமிழ் மீட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் அம்மான் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக மக்ககுக்கு நிவாரணம் வழங்க தவறி மாநில, ஓன்றிய அரசுகளை கண்டித்தும். மேலும் மழைநீர் கால்வாய் மற்றும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றாத மாநில அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல்லாவரம் தொகுதியில் இரண்டு முறை திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற இ.கருணாநிதி மழைநீர் கால்வாய்களை சீர்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை திராவிட கட்சிகள் செய்துள்ளதால் அதை அகற்ற ஆண்ட அதிமுக மற்றும் ஆளுகின்ற திமுக கட்சியினர் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என குற்றம்சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது செங்கல்பட்டு வடக்கு மாவ்ட்ட பொறுப்பாளர்கள் தலைவர் மகேந்திரவர்மன், செயலாளர் நாகநாதன், பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் பட்ரோடு ராசன், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர்கள் செயலாளர் கனகராஜ், தலைவர் கோபி, பொருளாளர் மகாலிங்கம், இணைச்செயலாளர் செல்வம், துணைச் செயலாளர் சுப்புரமணியன், துணைத் தலைவர் சுரேஷ், அய்யாமலை, செய்தி தொடர்பாளர் கணேஷ் உட்பட நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள், ம்களிரணியினர் ஏராளமனோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News