பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் நிவாரண உதவி
அகரம்தென் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், அகரம்தென் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய 11வது வார்டு கவுன்சிலர் அமுதா வேல்முருகன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் மற்றும் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் ஆகியோர் வழஙகினார்.