சென்னை பல்லாவரத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

சென்னை பல்லாவரத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-16 15:00 GMT

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் கலால் ஆய்வாளர் சரவணன் தலைமையில் கஞ்சா விற்பனை செய்யும் நபரை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த அர்ஜூன்(25), என்பதும், அருண் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டால் கஞ்சா கொண்டு வந்து தருவார், அதை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருகிறேன் என்றார். அதனடிப்படையில் அருணிடம் தொடர்பு கொண்டு கஞ்சா கேட்ட போது பல்லாவரத்தை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் கஞ்சாவை கொடுத்தனுப்பினார்.

இருவரையும் கைது செய்த  போலீசார் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாள் இருவர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரியான வாண்டு என்கிற அருணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News