பம்மலில் 6 ஆடுகளை திருடிய மர்ம நபர்கள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமிரா
பம்மலில் 6 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி கேமிரா பதிவு மூலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம், பல்லவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகர் சீத்தலைசாத்தனார் தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 32) இவர் ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்திவந்தார்.
இந்நிலையில் கடந்த 03.11.2021 அன்று வீட்டின் அருகில் இருந்த இரண்டு வெள்ளை ஆடுகளை காணவில்லை. அதேபோல் 06.11.2021. ஆம் தேதி காலை 10 மணியளவில் மழையின் காரணமாக தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த 4 ஆடுகளையும் காணவில்லை. இவ்வாறு மர்மமான முறையில் காணாமல் போகும் தனது ஆடுகளை கண்டுபிடித்து தரகோரி பம்மல் சங்கநகர் காவல் நிலையத்தில் முரளி கிருஷ்ணன் புகார் மனு அளித்திருந்தார்.
புகாரின் பேரில் பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் உத்தரவின் பேரில் குற்றவியல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் தலைமை காவலர் திணேஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் மனிகண்டன், தனபால் ஆகியோரை கொண்ட தனிபடை அமைத்து ஆடுகள காணாமல் போன இடங்களில் உள்ல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆடுகளை திருடியது குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் 13 வது தெருவை சேர்ந்த டேவிட்வினோத் என தெரியவந்தது. மேலும் குற்றவாளியை கைது செய்து விசாரணைக்கு பினனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.